undefined

இன்று கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

 

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ‘மலைகளின் இளவரசி’ என புகழப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் அமைந்துள்ள பேரிஜம் ஏரிக்கு இன்று சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை அழகையும், சுற்றுலா அனுபவத்தையும் வழங்கும் இந்த இடத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள்.

தற்காலிக தடை காரணமாக இன்று பேரிஜம் ஏரிக்கு பயணிகள் செல்ல முடியாது. வனத்துறை பராமரிப்பு பணிகள் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி ஊழியர்களின் விடுமுறை காரணமாக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை அக்டோபர் 22ம் தேதி முதல் வழக்கம் போல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று கொடைக்கானல் வனச்சரகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?