undefined

 பல்லடத்தில் மீண்டும் சோகம்... லாரி - சரக்கு வேன் மோதி 2 பேர் உயிரிழப்பு!

 
 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 பேர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட நிலையில் அடுத்த அதிர்ச்சியாக இன்று அதிகாலை லாரி மீது சரக்கு  வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் இருந்து மரப்பலகைகளை ஏற்றிக் கொண்டு பாலக்காடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரியை ராஜன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பல்லடம் அருகே கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே சென்றுக் கொண்டிருந்த போது டீசல் தீர்ந்ததால் லாரியை சாலை ஓரமாக ராஜன் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் காங்கயத்தில் இருந்து காமநாயக்கன்பாளையத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை விற்பனை செய்வதற்காக, கோழிகளை ஏற்றிக் கொண்டு சித்தம்பலம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜ்குமார் (35) என்பவர் கோழி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். இந்த வண்டியில் சுமை தூக்கும் பணியாளர்கள் பாபு (30), வேல்முருகன் மற்றும் ரவி, கவியரசன் (33) ஆகியோர் இருந்துள்ளனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் ஓட்டுநர் ராஜ்குமார் கோழி வண்டியை அதிவேகமாக இயக்கியதால், மரப்பலகையோடு நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கவியரசன் மற்றும் பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார் விபத்துக்குள்ளான லாரியில் கை, கால்கள் முறிவு ஏற்பட்டு சிக்கியிருந்த ஓட்டுநர் ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!