30 வயதில் சோகம்... பிரபல கால்பந்து வீரர் ஜீசஸ் டி மிகுவேல் காலமானார்!

 

ஸ்பெயினின் செகுண்டா டிவிஷன் தொடரில் விளையாடி வரும் டெனரிஃப் அணியின் 30 வயதான தாக்குதல் ஆட்டக்காரர் ஜீசஸ் டி மிகுவேல், மைதானத்தில் ஏற்பட்ட கடுமையான மோதலின் காரணமாக காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அன்டோரா அணிக்கு எதிரான போட்டியின் போது, எதிரணியின் கோல்கீப்பர் ஜீசஸ் ஓவோனோவுடன் ஜீசஸ் டி மிகுவேல் எதிர்பாராதவிதமாக மிகக் கொடூரமாக மோதினார். மோதலுக்குப் பின் மைதானத்திலேயே அவருக்கு அவசர மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், காயங்களின் தீவிரத்தால் இன்று காலை 8:00 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் டெனரிஃப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

டெரனிஃப் கால்பந்து கழகம் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், "எங்கள் அணியின் வீரர் ஜீசஸ் டி மிகுவேல் அலமேடாவின் மறைவை மிகுந்த கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். இந்தத் துயரமான இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

30 வயதே ஆன இளம் வீரா் போட்டிக் களத்தில் ஏற்பட்ட காயத்தால் மரணமடைந்த சம்பவம், ஸ்பெயின் கால்பந்து வட்டாரத்திலும் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையேயும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.