விடுமுறை நாளில் சோகம்... குரோம்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு!

 
குரோம்பேட்டை அருகே சோகம்: பெரிய ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு!

சென்னையை அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 4 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (10), பூஜா (13), குஷி (13), தேவதர்ஷன் (12) ஆகிய நான்கு சிறார்களும் ஏரியில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.

குழந்தைகள் ஏரியில் மூழ்கியது குறித்துத் தகவலறிந்ததும் மீட்புக்குழுவினர் உடனடியாக விரைந்து சென்று நான்கு பேரின் உடல்களையும் ஏரியிலிருந்து மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.