காங்கேயத்தில் கோர விபத்து: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பரிதாப பலி!

 

 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் எதிர்த்திசையில் வந்த இருசக்கர வாகனமும், மற்றொரு இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் பாலாஜி (20) மற்றும் சுந்தரம் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட இந்த உயிரிழப்பு சம்பவம் காங்கேயம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது