தீபாவளி நவ.6-ம் தேதி பயணத்திற்கான ரயில் முன்பதிவு இன்று காலை தொடக்கம்!
Sep 7, 2026, 08:05 IST
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கான ரயில் முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது.
தீபாவளிப் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள், நவம்பர் 6-ம் தேதி ஊருக்குப் புறப்படுவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவை இன்று காலை 8 மணி முதல் செய்யலாம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விடமிகவும் அதிகமாக இருக்கும் என்பதால், ரயில் டிக்கெட் முன்பதிவில் கடும் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.