சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து - ரயில் சேவை தற்காலிகமாக பாதிப்பு!

 

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம்: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில், கடற்கரை ரயில் நிலையத்திற்குள் நுழையும்போது அதன் 5-வது பெட்டியின் ஒரு சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகியதால் தடம் புரண்டுள்ளது. 

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/PE6fOCE8Qf8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/PE6fOCE8Qf8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், தடம் புரண்ட ரயில் பெட்டியைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.