தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது மோதிய  பயணிகள் ரயில்... பகீர் வீடியோ!  

 

 

போலாந்து நாட்டின் கிடாண்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளக் கடவையில் எதிர்பாராதவிதமாக ஒரு லாரி சிக்கிக்கொண்டது. பாதுகாப்புத் தடைகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட அந்த லாரியை நகர்த்த டிரைவர் முயன்றபோது அதிவேகமாக வந்த பயணிகள் ரெயில் அதன் மீது பயங்கரமாக மோதியது.

🇵🇱 In Gdańsk, Poland, a passenger train collided with a truck at a railway crossing

Instead of driving straight through and breaking the lowered barrier, the driver reversed and tried to maneuver.

The truck driver was injured. Several train passengers suffered minor injuries. pic.twitter.com/IWWjvNBQjm

— Visegrád 24 (@visegrad24) September 4, 2026

இந்த விபத்தில் லாரியின் பின் பகுதி அப்பளம் போல நொறுங்கியதுடன், ரெயில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் ரெயிலில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்களில் 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரெயில்வே தண்டவாளக் கடவைகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த விபத்து உணர்த்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.