காதலுக்கு மரியாதை...  திருநங்கையை கரம் பிடித்த கோவில் அர்ச்சகர்!  

 

 

கடலூர் அருகே உள்ள புதுப்பாளையம் கோயில் அர்ச்சகரான நாகராஜன், கடந்த 6 ஆண்டுகளாக நாட்டுப்புறக் கலைஞரான சஞ்சனாவைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, முறைப்படி திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, திருவந்திபுரம் கோயிலில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இரு வீட்டாரும் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்த இந்தத் திருமண விழாவில், மணமக்கள் இருவரும் மாலை மாற்றித் கரம்பிடித்தனர். சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு தடைகளை உடைத்து, தங்களது உண்மையான காதலுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளனர். இந்த வித்த்தில் இவர்கள் இருவரது திருமணம் பலருக்கும் ஒரு முன்மாதிரியாகவும் மாறியுள்ளது.

சமூக மாற்றத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கும் இந்த இளம் காதல் ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து தங்களது நல்வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இவர்களின் இந்தத் திருமணம் தற்போது அப்பகுதி முழுவதும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.