300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் ரமேஷ்!

 

 

திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைச்சர் ரமேஷ், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மதிய உணவு விருந்து அளித்து அவர்களுடன் பண்டிகையைக் கொண்டாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் தீபாவளி பட்டாசுகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, விவசாயிகளுடன் ஒரே இடத்தில் அமர்ந்து அவரும் மதிய உணவு சாப்பிட்டார்.

அப்போது விவசாயிகள் அமைச்சருக்கு இனிப்புகளை ஊட்டி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். விவசாயிகளுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடிய இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விவசாயிகளுக்கு புத்தாடைகள் மற்றும் பண்டிகைப் பரிசுகள் வழங்கி, அவர்களுடன் உணவருந்திய அமைச்சரின் இந்த நிகழ்ச்சி திருச்சியில் கவனம் பெற்றுள்ளது.