திருச்சியில் கனமழையால் 2,000 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின: விவசாயிகள் கவலை
Oct 26, 2026, 15:40 IST
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 2,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நெல் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விளைநிலங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வடியத் தாமதமானால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட விளைநிலங்களின் நிலவரத்தை அறியும் வகையில் நீரில் மூழ்கிய பகுதிகள் ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.