திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ கார் மீது மர்ம கும்பல் தாக்குதல்!
Sep 26, 2026, 21:15 IST
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவின் கார் மீது மர்ம கும்பல் ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சிரம்புராவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் எம்எல்ஏ குனல் கோஷ் காரில் சென்று கொண்டிருந்தார்.
உத்தர்பரா பகுதியில் அவரது காரை வழிமறித்த மர்ம கும்பல், காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் எம்எல்ஏ மீது முட்டைகளையும் வீசித் தாக்குதலில் ஈடுபட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் முறைப்படி புகார் அளித்துள்ள எம்எல்ஏ குனல் கோஷ், பாஜக எம்எல்ஏ தீபன்ஜனின் ஆதரவாளர்களே திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.