undefined

 திரிபுரா பெண்ணுக்கு வாடகை வாகன ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை ! 

 

சென்னையில் வாடகை வாகன ஓட்டுநர் ஒருவர் 22 வயது இளம் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவருடன் மதுரவாயலில் வசித்து வருகிறார். கடந்த 26-ம் தேதி அவர்களது வீடு திரிபுராவைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர் முக்கியமான பொருளை மறந்து சென்றதை கவனித்த அந்த பெண், அதை அவர்களின் பள்ளிக்கரணை வீட்டிற்கு வாடகை வாகன சேவையின் மூலம் சென்று ஒப்படைத்தார்.

பின்னர் நள்ளிரவில் அதே செயலி வழியாக வாகனம் பதிவு செய்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அறிமுகமான அதே வாகன ஓட்டுநர், வழக்கமான பாதையில் செல்லாமல் இருட்டான பகுதியொன்றிற்கு காரை திருப்பியதுடன், கத்தி முனையில் மிரட்டி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்டவர் தேனி மாவட்டம் ஓடையப்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் (22) என்பதும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!