தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா நடிகை த்ரிஷா?  

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறித் தற்போது பல தகவல்கள் தீவிரமாகப் பரவி வருகின்றன. வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவர் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து தீவிர அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழ் திரையுலகில் நீண்ட காலமாகத் தனது சிறப்பான நடிப்பால் கோலோதி வரும் இவரது அரசியல் எண்ட்ரி குறித்த பேச்சுக்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சமீப காலமாக நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாகத் ‘த்ரிஷா நற்பணி மன்றம்’ என்ற பெயரில் சுவரொட்டிகள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதும் பொதுமக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. நடிகர் விஜய்யின் மிக நெருங்கிய வட்டத்திற்குள் த்ரிஷா தொடர்ந்து இயங்கி வருவதாகவும் திரைத்துறையிலும் அரசியல் தரப்பிலும் பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

சினிமா துறையைத் தாண்டி பொதுவாழ்விலும் தனது காலடியைப் பதிப்பதற்கான முன்னோட்டமாகவே இத்தகைய ஏற்பாடுகள் நடப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.எனினும், தவெகவில் நடிகை த்ரிஷா இணைவது குறித்துத் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். வலம் வரும் தகவல்கள் உண்மையாகுமா அல்லது வதந்தியாகக் கடந்து செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்