"40 கிலோ எடை கொண்ட நடிகை" - த்ரிஷா குறித்து தனியரசு சர்ச்சைப் பேச்சு!

 

சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றது குறித்துத் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாகத் நெல்லையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தணியரசு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றியதைக் குறிப்பிட்ட அவர், அந்த நேரத்தில் 40 கிலோ எடைக் கொண்ட ஒரு நடிகையைத் தமிழக மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் அவலம் நடந்ததாக விமர்சித்துப் பேசினார்.

நடிகை திரிஷாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அவரது எடையைக் குறிப்பிட்டு அவர் பேசிய இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் களத்திலும் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.