உதயநிதிக்குக் கண்டனம் - த்ரிஷா ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை!

 

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றத்தினர் நகரம் முழுவதும் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பெண்களின் பெயரைப் பயன்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்தத்தில் பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது" என ரசிகர் மன்றத்தினர் தங்களது போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

"எங்கள் அன்பு அக்கா திரிஷா குறித்து யார் தவறாகப் பேசினாலும் பொறுத்துக்கொள்ள முடியாது" எனத் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவெளியில் பெண்களைக் தரக்குறைவாகச் சித்தரிக்கும் பேச்சுக்கள் தொடர்ந்தால், உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த நேரிடும் என்றும் அந்த போஸ்டர்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் விவகாரம் மதுரை அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.