"என் (மே) கொண்டாட்டம் தொடங்கிடுச்சு" - வைரலாகும் த்ரிஷாவின் இன்ஸ்டா புகைப்படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய பதிவு மற்றும் புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. மே மாதம் பிறந்ததை முன்னிட்டு அவர் பதிவிட்டுள்ள வாசகம் பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது.
நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மே மாதம் தொடங்கியதைக் குறிக்கும் வகையில், "மே (என்) மாதம் தொடங்கிவிட்டது" (May (My) month has started) என்று பதிவிட்டுள்ளார். மே மாதம் த்ரிஷாவின் பிறந்தநாள் வரும் மாதம் என்பதால் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவோடு அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
சமீபகாலமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் குடும்ப உறவு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிறத்திலான ஆடையில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தால் சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் 'சங்கீதா தரப்பு', 'த்ரிஷா தரப்பு' என இரண்டாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் பயணம் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில், த்ரிஷாவின் ஒவ்வொரு அசைவும் நெட்டிசன்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஒருபுறம் சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருந்தாலும், த்ரிஷாவின் இந்தப் புதிய புகைப்படத்திற்கு அவரது தீவிர ரசிகர்கள் லைக்குகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர். மே 4-ம் தேதி த்ரிஷாவின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.
எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்காமல் அமைதி காக்கும் த்ரிஷா, தற்போது பகிர்ந்துள்ள இந்தப் பதிவு அவரது தன்னம்பிக்கையைக் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.