சிக்கலில் எடப்பாடி... அமித்ஷா - இபிஎஸ் ஆலோசனையில் நடந்தது என்ன? - 

 

திருவண்ணாமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதற்காகச் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.

அதிமுக நிர்வாகிகளான எஸ்பி வேலுமணி மற்றும் பி.தங்கமணி ஆகியோர் கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாகவும், இதற்கு மத்திய அரசின் ஆதரவு தேவை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், "இது அதிமுகவின் முற்றிலும் உள்கட்சி விவகாரம். இதில் மத்திய அரசோ அல்லது பாஜகவோ தலையிட முடியாது; நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்" என அமித்ஷா திட்டவட்டமாகக் கூறி மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் சுமார் 15 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். இதில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தவெக மற்றும் ஆளும்கட்சியின் தீவிரப் பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளுமாறு அமித்ஷா அறிவுறுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.