முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை - டிரம்ப் திடீர் உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரபல ஊடக நிறுவனங்களான CNN, MS NOW மற்றும் பொலிடிகோ ஆகிய செய்தி நிறுவனங்களை வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தம்மைக் குறித்தும் தனது அரசு நிர்வாகம் குறித்தும் இந்தச் செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து பொய்யான மற்றும் காழ்ப்புணர்ச்சியூட்டும் "போலிச் செய்திகளை" வெளியிட்டு வருவதாக அதிபர் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது ஊடகங்கள் எப்போதும் நேர்மையாகவும் நியாயமான முறையிலும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அதிரடித் தடை தற்போதைக்குக் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் இதே போன்ற போக்கைக் கடைப்பிடிக்கும் மற்ற செய்தி நிறுவனங்களுக்கும் இந்தத் தடை நீட்டிக்கப்படலாம் என்று அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.