பிரபல பாடகி குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு... வைரல் வீடியோ!
Oct 26, 2026, 16:02 IST
அமெரிக்க இடைத்தேர்தலை முன்னிட்டு மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில், பிரபல பாடகி நிக்கி மினாஜின் தோற்றம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய கருத்து கவனம் பெற்றுள்ளது.
அக்டோபர் 25-ம் தேதி போர்ட் ஹுரானில் நடைபெற்ற கூட்டத்தில், ஓஹியோ செனட்டர் ஜான் ஹஸ்டெட்டின் விளையாட்டு வாழ்க்கை மற்றும் உடல் அமைப்பு குறித்து டிரம்ப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நிக்கி மினாஜின் தோற்றத்தையும் குறிப்பிட்டு, அவரது பின்புறத் தோற்றம் மிகவும் கவனத்தை ஈர்ப்பதாகக் கூறினார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.
டிரம்பின் ஆதரவாளரான நிக்கி மினாஜும் கூட்டத்தில் பங்கேற்று, அவருக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.