பிரபல பாடகி நிக்கி மினாஜ் குறித்து ட்ரம்ப் சர்ச்சை பேச்சு... அமெரிக்க அரசியலில் பரபரப்பு!
அமெரிக்க இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல ராப் பாடகியான நிக்கி மினாஜ் குறித்துப் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
மிச்சிகன் கூட்டத்தில் செனட்டர் ஜான் ஹஸ்டெட்-ன் விளையாட்டுத்துறை சாதனைகள் மற்றும் விளையாட்டு வாழ்க்கை குறித்துப் பேசிக் கொண்டிருந்த டிரம்ப், திடீரெனப் பேச்சைத் திருப்பிப் பாடகி நிக்கி மினாஜின் உடலமைப்பு மற்றும் தோற்றம் குறித்துப் புகழ்ந்து பேசியுள்ளார்.
நிக்கி மினாஜ் பகிரங்கமாக ட்ரம்பிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வரும் சூழலில், அவரைப் பற்றிய டிரம்பின் இந்த சர்ச்சை கருத்துக்கள் அடங்கிய வீடியோ மற்றும் பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதற்கு முன்னரும் பல சர்வதேச பிரமுகர்கள் குறித்து டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த நிகழ்வு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.