இஸ்ரேலுக்கான ஆண்டுக்கு ரூ.33000  கோடி ராணுவ உதவி நிறுத்தம்? டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு!

 

 

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியை 2026-ம் ஆண்டு இறுதியுடன் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சில மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் பொருளாதார ரீதியாக வலுவடைந்துள்ளதால் இனி அமெரிக்க நிதியுதவி தேவையில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டார். அதேநேரத்தில், இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விற்பனை தொடரும் என்றும், தேவை ஏற்பட்டால் உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்கா - இஸ்ரேல் இடையே 2016-ம் ஆண்டு கையெழுத்தான 10 ஆண்டு ராணுவ உதவி ஒப்பந்தம் 2028-ம் ஆண்டு செப்டம்பர் வரை அமலில் உள்ளது. இதன்படி, 2019 முதல் 2028 வரை மொத்தம் 38 பில்லியன் டாலர் உதவி வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே உதவியை நிறுத்துவது எப்படி என்பது குறித்து டிரம்ப் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

இதற்கிடையே, அமெரிக்காவின் அறிவிப்பு குறித்து இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் விமர்சித்துள்ளார். பாதுகாப்பு உறவில் ஏற்படும் மாற்றம் குறித்து இஸ்ரேல் மக்களும் பாதுகாப்புத் துறையினரும் ஊடகங்கள் மூலமே தெரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.