ஹோர்முஸ் நீரிணைக்குத் தனது பெயரை வைக்க ட்ரம்ப் பரிந்துரை - சர்வதேச அரங்கில் சலசலப்பு!

 

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தன்வசப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதற்கு 'ட்ரம்ப் நீரிணை' எனப் பெயர் மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது உலக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், இனி அந்தப் பகுதிக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என்று பெயரிட வேண்டும் எனத் தனது 'ட்ரூத்'  சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நீரிணைப் பகுதி இனி முன்பை விடவும் மிகவும் பரபரப்பாகவும் "சூடாகவும்" இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் மிக முக்கியமான எண்ணெய் வரத்துப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் இந்த அதிரடி அறிவிப்பு, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.