undefined

கருவை கலைக்க முயற்சித்ததால் விபரீதம்... கல்லூரி மாணவி உயிரிழப்பு!

 

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில், கருவை கலைக்க முயற்சித்த 17 வயது சிறுமி உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அய்யலூரைச் சேர்ந்த அந்த சிறுமி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமாகியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்ததாகவும், பின்னர் 7 மாதம் ஆன போது பெற்றோருக்கு விஷயம் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவசரமாக கருவை கலைக்க நாட்டு மருந்துகளைப் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் உடல்நிலை மோசமடைந்த அந்த மாணவி கடந்த 24ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகப்பேறு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று (அக்.28) சிறுமி உயிரிழந்தார்.

இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான நபர் யார், நாட்டு மருந்து வழங்கியவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?