undefined

 கொடைக்கானலில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயற்சி... சுற்றி வளைத்த வனத்துறையினர்!

 
 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்து யானை தந்தத்தைப் பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் மலைக்கிராமத்தில் ஒருவரிடம் கடந்த ஒரு வருட காலமாக யானை தந்தம் ஒன்று இருப்பதாகவும், அதனை விற்பனை செய்வதற்காக முயற்சிகள் நடப்பதாகவும் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு பிரிவினர், திண்டுக்கல் வனப்பாதுகாப்பு பிரிவினர் மன்னவனூர் வனச்சரக பணியாளர்கள் ஆகியோர் மன்னவனூர் பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில்  கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை மன்னவனூர் கைகாட்டி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வாகனத்தில் யானை தந்தம் கொண்டுசென்றதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதில் யானை தந்தத்தை ஒரு வருடமாக வைத்திருந்த மன்னவனூர் அருகே  கீழானவயல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், அவருடன் வந்த பட்டிவீரன்பட்டியை சேர்ந்த முருகேசன், பொன்வண்ணன் ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு யானை தந்தத்தை விற்பனை செய்ய பட்டிவீரன்பட்டியை சேர்ந்த இருவர் கோடி கணக்கில் பேரம் பேசியது வனத்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த வனத்துரையினர், அவர்களிடம் இருந்த யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

இவர்களுக்கு யானை தந்தம் எப்படி கிடைத்தது?தந்ததிற்காக யானை கொல்லப்பட்டதா? யானை தந்தத்தை விற்க முயற்சித்ததில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் வனத்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா