அரசு நிர்வாகம் படப்பிடிப்பு தளமல்ல... சோத்துப்பாறை அணையை திறந்த தவெகவினர்... டிடிவி கடும் கண்டனம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அரசு அதிகாரிகளின் அனுமதியின்றி திறந்ததாகக் கூறப்படும் தவெகவினரின் செயலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சோத்துப்பாறை அணையில் இருந்து தவெக நிர்வாகிகள் சிலர் தண்ணீரைத் திறந்துவிட்டு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடித் தொடர்புடைய அணையை நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றி திறக்க அனுமதி அளித்தது யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு நிர்வாகம் என்பது யார் நினைத்தாலும் செயல்படுத்தும் இடமல்ல என்றும் விமர்சித்துள்ளார்.மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.