அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்கத் தீவிரம்: தென் மாவட்ட நிர்வாகிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தை!
Aug 27, 2026, 18:50 IST
அதிமுகவை மீண்டும் பலப்படுத்தவும், பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒன்றிணைக்கவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தென் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகளிடையே வலுப்பெற்றுள்ளது.
தென் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த சில அதிமுக நிர்வாகிகள், டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து, இரு தரப்பு நிர்வாகிகளுக்கும் இடையே மறைமுக மற்றும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியில் நடக்கும் இந்த நிகழ்வுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்திருந்தாலும், அவர் இதனைத் தற்போதைக்குக் கண்டும் காணாமல் மௌனம் காப்பதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.