துருக்கி: நிலநடுக்கம் துயரத்திலும் கொள்ளையடிக்கும் கும்பல்.. 48 பேர் கைது !!

 

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த இரு நாடுகளிலும் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின. கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

துருக்கி மட்டுமல்லாமல் இந்தியா, சீனா, அமெரிக்கா பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்புகுழுவினர் அங்கு முகாமிட்டு மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாள் தோறும் ஆயிரக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் உயிருடனும் பலரும் மீட்கப்பட்டு வருவது தொடர்கிறது.

பலமுறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கியில் துயரத்துக்கு மத்தியில், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு 48 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணம், ஸ்மார்ட்போன்கள், கணினிகள், நகைகள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஆயுதங்கள் போன்றன பறிமுதல் செய்யப்பட்டன. சிதலமடைந்து காணப்படும் வீடுகள், அலுவலகங்களில் இருந்து இவர்கள் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.