தவெக நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மோதல்! எம்.எல்.ஏ ஹரிஷ் முன்னிலையில் கோஷ்டி பூசலால் பரபரப்பு

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிகழ்ச்சியின்போது கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.

இந்நிகழ்ச்சியில் தவெக எம்.எல்.ஏ ஹரிஷ் பங்கேற்றிருந்தார். அப்போது கட்சியின் ஆரம்பகால நிர்வாகிகளுக்கும், பிற கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

allowfullscreen

இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாறி மாறி கோஷமிட்டுப் பேசியதால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.கட்சிக்குள் ஏற்கெனவே இருந்த நிர்வாகிகளுக்கும் புதிதாக இணைந்தவர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு வெளிப்படையாக மோதலாக மாறியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

எம்.எல்.ஏ பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட இந்த மோதல், தவெக தொண்டர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்குவாதம் தொடர்பாக கட்சித் தலைமை தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த தகவல் வெளியாகவில்