TVK எம்.எல்.ஏ. கபில் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
Aug 17, 2026, 21:52 IST
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கபில் செய்தியாளர்களைத் தாக்கிய புகாரில், சம்பவம் நடந்து 21 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யூடியூப் தளம் ஒன்றில் வீடியோ பதிவிட்ட நபர் ஒருவரை, சோளிங்கர் எம்.எல்.ஏ. கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் அவர்கள் தாக்கியதோடு, அவர்களது கைபேசிகளையும் சேதப்படுத்தியதாகப் புகார்கள் எழுந்தன.
செய்தியாளர்கள் அளித்துப் புகாரின் பேரில் 21 நாட்களுக்குப் பிறகு, சோளிங்கர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கபில் மீது காவல்துறையினர் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.