விசில் ஊதி தவெக வெற்றிக் கொண்டாட்டம்: நெகிழ்ச்சியில் விஜய்யின் குடும்பத்தினர்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் தற்போது 112 தொகுதிகளில் முன்னிலை பெற்று மாபெரும் அரசியல் சாதனையைப் படைத்து வருகிறது. புதிய கட்சி ஒன்று முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை நோக்கி முன்னேறுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை தவெக தலைவர் விஜய்யின் குடும்பத்தினர் மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தவெக 112 இடங்களிலும், அதிமுக 65 இடங்களிலும், திமுக 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையுமென்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விஜய்யின் குடும்பத்தினர் கொண்டாடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தவெக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.