அரசு விரைவுப் பேருந்து செயலியில் மாற்றம் ... தவெக கொடி வண்ணத்தில் புதிய வடிவமைப்பு!

 

தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து சேவைகளுக்கான அதிகாரப்பூர்வ செயலி மற்றும் இணையதள வடிவமைப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் பல்வேறு நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாகப் பயணிகள் தங்களது பேருந்து பயணச்சீட்டுகளை மிகவும் எளிமையான முறையில் முன்பதிவு செய்ய முடியும். பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே இந்த புதிய மாற்றங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

தற்போது இந்தச் செயலியின் தோற்றம் மற்றும் வண்ணக் கலவையில் புதிய வடிவமைப்பு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் (TVK) கொடியின் வண்ணங்களைக் குறிக்கும் வகையில் இதன் புதிய வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் மற்றும் வடிவமைப்புகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. பயனர்கள் இந்த புதிய தோற்றத்தை மிகுந்த ஆச்சிரியத்துடனும் ஆர்வத்துடனும் கவனித்து வருகின்றனர்.

பயணிகளின் கருத்துகளுக்கு ஏற்ப அரசுப் பேருந்து செயலிகளில் தொடர்ந்து பல்வேறு பயனுள்ள வசதிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியமின்றி வீட்டில் இருந்தபடியே பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். எதிர்காலத்திலும் போக்குவரத்துத் துறையில் இதுபோன்ற நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.