CMDA புதிய உறுப்பினராகத் தவெக எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் நியமனம்!
Sep 2, 2026, 07:55 IST
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் புதிய உறுப்பினராகத் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். தனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியதற்காக அவர் முதலமைச்சர் விஜய்க்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
CMDA அமைப்பின் புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரேவந்த் சரண், தனது எக்ஸ் தளப் பக்கத்தின் வழியாக முதலமைச்சர் விஜய்க்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
தன் மீது முழு நம்பிக்கை வைத்து வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முதலமைச்சரின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்றுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.