undefined

அடுத்தடுத்த நாளில் இரண்டு திருமணம்.. கையும் களவுமாக சிக்கிய இளைஞர்.. அதிர்ச்சி பின்னணி!

 

சென்னை கேளம்பாக்கம் சர்ச் தெருவை சேர்ந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவருடன் ஆவடியை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார். இருவரும் வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, 2022ல் மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்தனர்.

திருமணத்திற்கு பின், பெண்ணிடம் நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங், ஒரு கட்டத்தில் அவரை விட்டுவிட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த சில மாதங்களில் பெண்ணுடனான அனைத்து தொடர்புகளையும் அவர் துண்டித்துவிட்டார். இதனால், அவரைத் தேடி அந்தப் பெண் கேளம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் காதல் திருமணமான மறுநாளே வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதல் மனைவி, இது குறித்து பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங்கிடம் கேட்டுள்ளார். அப்போது முதல் திருமணத்தை சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் முதல் மனைவி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேளம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா