வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... செப்டம்பர் 1 முதல்   சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு !

 

 

உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதுதொடர்பாகத் திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கட்டண விவரங்கள்:

  • கார், ஜீப், வேன்: ஒரு முறை பயணக் கட்டணம் மாற்றமின்றி 70 ரூபாயாகவே தொடரும். அதே நாளில் பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் 100 ரூபாயிலிருந்து 105 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் 2,125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • இலகு ரக வணிக வாகனங்கள்: ஒரு முறை பயணக் கட்டணம் 120 ரூபாயிலிருந்து 125 ரூபாயாகவும், பலமுறை பயணக் கட்டணம் 180 ரூபாயிலிருந்து 185 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் 3,715 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • லாரி மற்றும் பேருந்துகள்: ஒரு முறை பயணக் கட்டணம் 240 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், பலமுறை பயணக் கட்டணம் 355 ரூபாயிலிருந்து 370 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் 7,435 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • கனரக வாகனங்கள்: பல்வகை அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கான ஒரு முறை பயணக் கட்டணம் 380 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும், பலமுறை பயணக் கட்டணம் 575 ரூபாயிலிருந்து 595 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணம் 11,950 ரூபாயாகும்.

செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்தக் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகளும் சரக்கு வாகன உரிமையாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.