மழை நீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி... கதறித் துடித்த தாய்!
பூவிருந்தமல்லி அருகே மாங்காடு பகுதியில் வசித்து வந்த சந்தீப் குமார் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினிக்கு இரண்டரை வயது மகள் பிரணிகாஸ்ரீ இருந்தார். பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை அவர் தனது மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் விழித்தபோது, அருகில் இருந்த மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மகளைத் தேடி வெளியே சென்ற அவர், அருகிலிருந்த காலி மைதானத்தில் தேங்கிய மழைநீரில் பிரணிகாஸ்ரீ மிதந்துகிடந்ததை கண்டு கதறியுள்ளார். உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தாய் தூங்கியிருந்தபோது, விளையாடுவதற்காக வெளியில் வந்த சிறுமி தவறி மழைநீரில் விழுந்திருக்கலாம் என போலீசார் கூறினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் மரணத்தில் வேறு ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!