இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... சம்பவ இடத்திலேயே 2 இளைஞர்கள் பலி - திருவாரூரில் சோகம்!

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நன்னிலம் அருகே நேற்று மாலை இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று பலமாக மோதிக்கொண்டன. இதில் வாகனங்களில் பயணித்த கிருஷ்ணா (36) மற்றும் விஷ்ணு (25) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் சடலங்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை: இச்சம்பவம் தொடர்பாக நன்னிலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.