ஆளின்றி  பெட்ரோல் பங்குக்குள் தறிகெட்டு ஓடிய பைக்… பதற வைக்கும் காட்சிகள்!

 

 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், ஓட்டுநர் இல்லாமல் தறிகெட்டு ஓடிய இருசக்கர வாகனம் பெட்ரோல் பங்குக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்கள் மீது மோதாமல் சுவரில் மோதி நின்றதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

बिना राइडर दौड़ी चली आई बाइक... पेट्रोल पंप में जा घुसी, देखीए VIRAL VIDEO ! https://t.co/uKkIqhBmF0 https://t.co/uXzg2vb0Sg

— Rajasthan Tak (@Rajasthan_Tak) November 10, 2026

உதய்பூர் மாவட்டத்தின் பிந்தர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் ஒரு பைக்கில் பயணம் செய்தவர்கள் கீழே விழுந்தனர். மோதலின் வேகத்தில் அந்த பைக் அவர்களிடமிருந்து விலகி, ஓட்டுநர் இல்லாமலேயே முன்னோக்கிச் சென்றது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அருகிலிருந்த பெட்ரோல் பங்குக்குள் வேகமாக நுழைந்தது. அப்போது அங்கு வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திடீரென பைக் உள்ளே வந்ததைக் கண்டு ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்களை நெருங்கிய பைக், இறுதியில் சுவரில் மோதி நின்றது. இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதமோ காயமோ ஏற்படவில்லை.பெட்ரோல் பங்கின் சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.