புழல் சிறையில் அன்பில் மகேஷுடன் உதயநிதி சந்திப்பு… 3-வது முறையாக நேரில் நலம் விசாரிப்பு!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 15) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே இரண்டு முறை நேரில் சந்தித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று 3-வது முறையாக புழல் சிறைக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷை சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.400 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், உதயநிதியின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.