“டம்மி CM எப்போது விழிப்பார்?” – ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது உதயநிதி ஆவேசம்! 

 

 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது மிரட்டல், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கமிஷன் மற்றும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுவதாக உதயநிதி குறிப்பிட்டுள்ளார். இதனால் சாமானிய மக்கள் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி வரை பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் எந்தப் புகாருக்கும் பதிலளிக்காமல், பொறுப்பேற்காமல் இருப்பதாக விமர்சித்துள்ள அவர், “Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர் உடனடியாக விழித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தவும், தன் கட்சி எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் முதலமைச்சர் எப்போது நடவடிக்கை எடுப்பார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்