undefined

வீடியோ!! மேடையில் கண்கலங்கிய உதயநிதி ஸ்டாலின் !!

 

இன்று ஆகஸ்ட் 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திமுக சார்பில் வள்ளுவர்கோட்டத்தில்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவி அனிதா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதை பார்த்த  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கினார். 

தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றதற்கான காரணம்   அரியலூர் மாணவி அனிதாவின் அகால மரணம். 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றிருந்தார். ஆனால் அனிதாவால் நீட்தேர்வு அழுத்தங்களை எதிர்கொள்ள முடியவில்லை.  ’மூட்டைத்தூக்கும் தொழிலாளியின் மகளான தன்னைப் போன்ற மாணவிகளின் மருத்துவ படிப்பு கனவுக்கு தடையாக நிற்கும் நீட் நுழைவுத் தேர்வை நீக்க வேண்டும் ‘ என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 
தற்போது வரை  நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் உயிர்கள் பலியாவது தொடர்ந்து வருகிறது.  ’நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவோம்’ என்ற முழக்கத்துடன் ஆட்சியை பிடித்த  திமுக  நீட் ஒழிப்புக்கான சட்டப் போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  நீட் நுழைவுத் தேர்வினை முன்வைத்தும் தமிழக அரசு - தமிழக ஆளுநர்  மோதல் நீடித்து  வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!