116 நாட்களாக முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருந்தாரா? உதயநிதி ஸ்டாலின் சராமாரி கேள்வி!

 

 

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுவதாக விமர்சித்தார்.

ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், தலைமைச் செயலாளர் அதை முதல்வர் விஜய்யிடம் தெரிவித்தாரா என்றும், புகாரை மூடி மறைத்துப் பேரம் பேசிய தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். 116 நாட்களாக முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருந்தாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த வழக்கில் அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிய அவர், அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.