ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை திட்டம் வெற்றிகரமாக நடைமுறை - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும், அது தமிழக அரசின் முக்கிய சமூக நல முயற்சிகளில் ஒன்றாக திகழ்வதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிலர் தவறுதலாக விடுபட்டிருந்தனர். அவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் ரூ.1,000 தொகையை வழங்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
மேலும், “நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ ஒரு பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மகளிர் சுயநிறைவை வலுப்படுத்தும் ஒரு மைல்கல்லாகும்” என்று உதயநிதி கூறினார். அந்நிகழ்வில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!