”பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்ஜியம்” - தவெக அரசை விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
தவெக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் முற்றிலும் ஏமாற்றமளிப்பதாகவும், அது ஒரு 'மிகப்பெரிய பூஜ்ஜியம்' என்றும் அவர் சாடினார். "நாங்கள் ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களுக்குத் தான் இந்த அரசு புதிய பெயர்களைச் சூட்டி, சொந்தத் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது" எனக் குற்றம் சாட்டினார்.
"தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது பட்ஜெட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே என நிபந்தனை விதித்துள்ளனர்."
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிபந்தனைகளை விதித்து மக்களை இந்த அரசு ஏமாற்றி வருகிறது எனத் தனது காரசாரமான கண்டனத்தைப் பதிவு செய்தார்.