உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Aug 22, 2026, 09:50 IST
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனிடையே, தன் மீது தொடரப்பட்ட இந்தத் தேர்தல் வழக்கை அடிப்படையற்றது எனக் கூறி நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து முதன்மை மனுதாரரான மிலானி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.