மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து தாய் தற்கொலை! 

 

 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் 14 வயது மகள் உயிரிழந்த நிலையில், அவரது தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குந்தாப்புரா தாலுகா, கேதூர் அருகே ஷானடி கோரகா பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். கூலித் தொழிலாளியான இவரது மனைவி நேத்ராவதி (40). இவர்களது மகள் சுப்ரதி (14), பிறவியிலேயே பேச முடியாத நிலையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சுதாகர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் நேத்ராவதியும் சுப்ரதியும் இருந்துள்ளனர். பின்னர் வீட்டுக்குச் சென்ற அக்கம்பக்கத்தினர் இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த கோட்டா போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.