யுஜிசி நெட் தேர்வு... விடைக்குறிப்புக்கு ரூ200/- கட்டணம்... மாணவர்கள் ஆட்சேபனை!
யுஜிசி நெட் தேர்வின் தற்காலிக விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஒரு கேள்விக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவையற்ற ஆட்சேபனைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தேசியத் தேர்வு முகமை (NTA) விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், மாணவர்களின் ஆட்சேபனை நியாயமானதாக இருந்தால் அந்தத் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரத்து செய்யப்பட்ட ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களுக்கான மறுதேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்ப பாடங்களுக்கான மறுதேர்வுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகள் எவ்விதத் தடையுமின்றிச் சரியாக நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் விடைக்குறிப்பு திருத்தங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளலாம். தேர்வு அட்டவணை மற்றும் மறுதேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.