சுறாக்கள் நடுவே காதலிக்கு திருமண புரபோசல்! தண்ணீருக்குள் மோதிரத்துடன் இளைஞர் செய்த சர்ப்ரைஸ்
இங்கிலாந்தில் சுறாக்கள் நீந்திக் கொண்டிருந்த பிரம்மாண்ட தொட்டிக்குள் காதலிக்கு இளைஞர் ஒருவர் திருமண புரபோசல் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் Lincolnshire பகுதியில் உள்ள Skegness Aquarium-ல் இந்த வித்தியாசமான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. Buckinghamshire பகுதியைச் சேர்ந்த James Walsh என்பவர் தனது காதலி Paige Cook-க்கு இந்த சர்ப்ரைஸை கொடுத்துள்ளார்.
சுறாக்கள் Paige-க்கு மிகவும் பிடித்த விலங்கு என்பதால், அவரை திருமணம் செய்யக் கேட்கும் தருணத்தை சுறாக்கள் சூழ்ந்த இடத்தில் உருவாக்க James திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் முன்கூட்டியே Aquarium நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு தனது திட்டத்தை தெரிவித்துள்ளார். ஊழியர்களும் அவருக்கு உதவியுள்ளனர்.
திட்டமிட்டபடி இருவரும் wetsuit மற்றும் scuba diving உபகரணங்களை அணிந்து சுறாக்கள் இருந்த தொட்டிக்குள் இறங்கினர். அப்போது James தனது wetsuit-க்குள் மறைத்து வைத்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்தார்.
பின்னர் “Will you marry me?” என எழுதப்பட்ட சிறப்பு பலகையை காதலியிடம் காட்டி திருமணத்துக்கு சம்மதம் கேட்டார். எதிர்பாராத இந்த சர்ப்ரைஸால் Paige ஆச்சரியமடைந்தார். பின்னர் அவர் தனது சம்மதத்தை தெரிவிக்கும் வகையில் கை சைகை செய்தார். தொடர்ந்து இருவரும் தண்ணீருக்குள்ளேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த அனுபவம் குறித்து Paige கூறுகையில், சுறாக்களுடன் நீந்த வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்றும், அதே இடத்தில் திருமண புரபோசல் கிடைத்ததால் அந்த தருணத்தில் தான் சுறாக்கள் இருக்கும் தொட்டியில் இருப்பதையே மறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த வித்தியாசமான புரபோசல் தொடர்பான புகைப்படங்களையும் Skegness Aquarium சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த ஜோடி நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர்.