மனைவிக்கு போதை கொடுத்து 20 ஆண்டு பலருக்கு விருந்து, 10 லட்சம் ஆபாச வீடியோக்கள்... முன்னாள் கவுன்சிலர்  பகீர்  !

 

 

இங்கிலாந்து நாட்டின் கிரேட்டர் மான்செஸ்டர் ஸ்டாக்போர்ட் பகுதியைச் சேர்ந்த 60 வயது முன்னாள் கவுன்சிலர் ஒருவர், தனது மனைவிக்குத் தெரியாமல் போதை மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்து 20 ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் சிக்கியுள்ளார். 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொடூரச் செயல்களில் பிற ஆண்களையும் அவர் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

allowfullscreen

மனைவிக்கு இரவில் போதை கலந்த ஒயின் மற்றும் மருந்துகளைக் கொடுத்து சுயநினைவற்ற நிலையில் வைத்திருந்ததாகவும், சம்பவங்களைப் படம் பிடித்து ஆன்லைனில் பகிர்ந்ததாகவும் மான்செஸ்டர் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட செல்போனில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் 62 பாலியல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் சிக்கியதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

62 சம்பவங்களைக் கணவரும், மேலும் 4 பேரும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மற்றவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தனக்கு எதுவும் தெரியாது என்றும், கணவரை நம்பியிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.