உளுந்தூர்பேட்டையில் சோகம்: ஆட்டோ - பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் ரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று சனிக்கிழமை ரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டுநரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பழனிவேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக விபத்து மற்றும் முக்கியச் செய்திகளைத் தினமாலை.காம் தளத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.